Sunday 4 June 2017

நாடுக்கோழி மிளகு பூண்டு வறுவல்

நாடுக்கோழி மிளகு வறுவல் என்பது ஒரு உண்மையான செட்டிநாடு உணவாகும். இது மிகவும் காரமான டிஷ் ஆகும். இறைச்சி உண்பவர்கள் இந்த உணவை மிகவும் விரும்புவர். இது வாயில் எச்சிலய் ஊர செய்யும் உணவாகும் . இது சாதம், சப்பாத்தி  மற்றும் புரோட்டா உடன் ஒரு சுவையான காம்பினேஷனாக இருக்கும் . இது ஒரு ஸ்டார்ட்டர் ஆக சாப்பிடலாம் . நாடுக்கோழி மிளகு வறுவலின் சுவை பிராய்லர் கோழி மிளகு வறுவிலிருந்து வேறுபடுகிறது.

வழக்கமாக, நாடுக்கோழியில் மாமிசம் குறைவாக இருக்கும் . தயாரிப்பதற்கு முன்பாக கோழி துண்டுகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இது பல உணவகங்களில் பிரபலமான உணவாகும். பூண்டு கோழிக்கு நல்ல வாசனை சேர்க்கிறது.

இதனை எளிமையாக வீட்டிலிலே தயாரிக்கலாம் . பயன்படுத்தப்படும் பொருட்கள் எப்பொழுதும் வீட்டில் கிடைக்கும். நாம் விரைவில் இந்த டிஷ்யை செய்ய முடியும்.

TO READ THIS RECIPE IN ENGLISH, CLICK HERE


TO READ THIS RECIPE IN ENGLISH, CLICK HERE

தேவையான பொருட்கள்

  1. பெரிய வெங்காயம் - (4-6)
  2. பச்சை மிளகாய் - 3
  3. பூண்டு  - (5-6)
  4. சீரகம் - 1 தேக்கரண்டி
  5. கறிவேப்பிலை - 2 
  6. தயிர் - 2 தேக்கரண்டி
  7. மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
  8. மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
  9. உப்பு - 2 தேக்கரண்டி

குக்கரில் சமைக்க 

  1. சிக்கன் - 500 கிராம்
  2. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  3. மிளகாய் வற்றல்  -2

செய்முறை 

  1. குக்கரில் நன்றாக கழுவிய  கோழி, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்  மற்றும் தண்ணீரை சேர்க்கவும். 15-20 நிமிடங்கள் வரை அதை வேக வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றவும் . சீரகத்தை சேர்க்கவும். அது வெடித்தவுடன் நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லையை சேர்க்கவும். 2-3 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும்.
  3. நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
  4. சமைத்த கோழியை வெங்காய கலவையோடு  சேர்க்கவும்.
  5. தயிர், சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும். 5 நிமிடங்கள் வரை வதக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி, நாடுக்கோழி மிளகு வறுவலை  அலங்கரிக்கவும்.
  1. கோழி நன்றாக வேகவில்லை என்றால், 5 நிமிடங்கள் கூடுதலாக வேக வைக்கவும்.
  2. சுவைக்கு ஏற்ப மசாலா மற்றும் உப்பை சரி செய்யவும்.


No comments:

Post a Comment

வாசகர்களின் விருப்பமான ரெசிபி

செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...