Tuesday 27 June 2017

இட்லி-தோசை மாவுவில் இருத்து வெங்காய ரவா தோசை செய்வது எப்படி?


இட்லி-தோசை மாவிலிருந்து ரவா தோசை செய்ய படத்துடன் செய்முறை மற்றும் குறிப்பு பின்வருமாறு. 


பொதுவாக ரவா தோசையை செய்ய மைதாவை பயன்படுத்துவர். ஆனால் நான் இந்த ரெசிபியில் மைதாவை பயன்படுத்தவில்லை. இந்த ரவா தோசை உணவகங்களில் கிடைக்கும் ரவா தோசை போல் சுவையாக இருக்கும்.


சில சமயம் சிறிது இட்லி- தோசை மாவு மீதம் இருக்கும் அல்லது மாவு புளித்து இருக்கும். புளித்த மாவில் தோசை செய்வது உடலுக்கு நல்லதல்ல. இந்த சமயத்தில் இட்லி- தோசை மாவிலிருந்து ரவா தோசை செய்யலாம். 

TO READ THIS RECIPE IN ENGLISH CLICK HERE.


தேவையான பொருட்கள்

  1. ரவை / செமோலினா - 1/2 கப்
  2. இட்லி/ தோசை மாவு  - 1/2 கப்
  3. வெங்காயம் (பெரியது) - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. மிளகு - 1/2 தேக்கரண்டி
  6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  7. இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  8. கறிவேப்பிலை - 3 
  9. கொத்தமல்லி - 3 
  10. பெருங்காயம் - 1/4 விரும்பினால்
  11. உப்பு - 1/2 தேக்கரண்டி
  12. தண்ணீர் - 1/2 கப்
  13. எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 
  14. கடுகு - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
  15. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை 

  1. ஒரு பாத்திரத்தில் ரவையோடு தண்ணீரை ஊற்றி குறைந்தது 15-20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
  3. கடுகு, உளுத்தம் பருப்பு, நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், இடித்த மிளகு, இடித்த சீரகம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும். நன்றாக வதக்கவும். 

  4. அகலமான பாத்திரத்தில் ஊறவைத்த ரவை, இட்லி/ தோசை மாவு, தாளித்த பொருட்கள், பெருங்காயம், உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்து கலக்கவும்.
  5. தோசை தவாவை காயவைத்து அதில் விளக்கெண்ணையை ஒரு துணி அல்லது திசு பேப்பர் கொண்டு தேய்க்கவும்.
  6. தோசை மாவை சுற்றி ஊற்ற வேண்டும். சிறுது எண்ணையை ஊற்றவும்.
  7.  ஒரு புறம் ரவா தோசை நன்கு வெந்ததும் 
  8. திருப்பி மறுபுறமும் நன்கு மொறு மொறுவென்று வரும் வரை வேகவைக்கவும். 
  9. தேவைப்பட்டால் சிறுது எண்ணெய் ஊற்றவும். சுவையான வெங்காயம் ரவா தோசை சுவைக்க தயார்.


குறிப்பு 

  1. வெங்காயம் இல்லாமல் கூட ரவா தோசையை தயாரிக்கலாம்.
  2. விருப்பப்பட்டால், துருவிய கேரட்டை சேர்த்துக்கொள்ளலாம்.
  3. சுவைக்கு ஏற்ப காரம் மற்றும் உப்பை சரிசெய்யவும்.
  4. சதா தோசையை விட ரவா தோசையை சமைக்க அதிக நேரம் ஆகும். இதற்க்கு காரணம் ரவை ஆகும். ரவை வேக சிறுது நேரம் ஆகும்.
  5. மொறு மொறுப்பு கூடுதலாக வேண்டும் என்றால் (1/4 - 1/2) கப் அரிசி மாவை இட்லி- தோசை மாவோடு சேர்த்துக்கொள்ளலாம்.

      2 comments:

      வாசகர்களின் விருப்பமான ரெசிபி

      செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

      சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...