Tuesday 1 August 2017

வெங்காய- தக்காளி(சப்ஜி) வதக்கல் ரெசிபி


வெங்காய- தக்காளி சப்ஜி மிகவும் எளிதாக செய்ய கூடிய ஒரு டிஷ் ஆகும். இது சப்பாத்தி மற்றும் தோசையுடன் மிக நன்றாக இருக்கும். வெறும் இரண்டு பொருட்களுடன் சுவையான இந்த சப்ஜியை சில நிமிடங்களில் செய்ய முடியும். 


குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். சில நிமிடங்களில் இது டிஷ் காலியாகிவிடும். இதன் சுவை அனைவரையும் ஈர்த்துவிடும்.   

To Read this Recipe in English, Click Here 

தேவையான பொருட்கள்

  1. வெங்காயம் - 3
  2. தக்காளி - 4
  3. சிவப்பு மிளகாய் தூள் - 1/2 மேஜை கரண்டி 
  4. மஞ்சள் - 1/2 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - 1 தேக்கரண்டி
  7. எண்ணெய் - 1 மேஜை கரண்டி 


  1. வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
  2. நீளமாக வெட்டிய வெங்காயத்தை சேர்க்கவும். பொன் நிறமாக மாறும் வரை வெங்காயத்தை வதக்கவும்.
  3. நறுக்கிய தக்காளியை சேர்க்கவும். 
  4. தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
  5. சிவப்பு மிளகாய் துளை சேர்க்கவும்.
  6. மஞ்சள் துளை சேர்க்கவும்.
  7. அனைத்தையும் ஒன்று சேருமாறு கலக்கவும். தக்காளியிலிருந்து எண்ணெய் வெளி வரும் வரை வதக்கவும்.
  8. சுவையான வெங்காய- தக்காளி சப்ஜி தயார்.    

To Read this Recipe in English, Click Here 

குறிப்பு

  1. விருப்பப்பட்டால் பெருங்காயத்தை சேர்த்து கொள்ளலாம்.
  2. வேண்டுமென்றால், மஞ்சள் துளை தவிர்க்கலாம்.
  3. சீரகம், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை முதலில் தாளித்து கொள்ளலாம்.
  4. நறுக்கிய பூண்டை சேர்க்கலாம், சுவை மாறுபடும்.
  5. உப்பு மற்றும் காரத்தை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்.   
  6. இந்த சபிஜியை நன்றாக வதக்க வேண்டும். தக்காளியிலிருந்து வெளி வரும் தண்ணீர் முழுமையாக வற்றி இருக்க வேண்டும்.
  7. வெங்காயம் மற்றும் தக்காளியின் அளவை மாற்றிக்கொள்ளலாம்.  
 

    No comments:

    Post a Comment

    வாசகர்களின் விருப்பமான ரெசிபி

    செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

    சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...