தேவையான பொருட்கள்
காலிஃபிளவர் பொரிப்பதற்க்கு
- காலிஃபிளவர் - 1
- இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- சோளம் மாவு - 3 மேஜை கரண்டி
- அரிசி மாவு - 2 மேஜை கரண்டி
- மைதா - 2 மேஜை கரண்டி
- மிளகாய் தூள் - 1/2 மேஜை கரண்டி
- உப்பு - 2 தேக்கரண்டி
- தயிர் - 2 மேஜை கரண்டி
மஞ்சூரியன் சாஸ் செய்வதற்க்கு
- வெங்காயம் - 2
- முட்டைக்கோஸ் - 2 மேஜை கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
- பச்சை மிளகாய் - 3
- தக்காளி சாஸ் - 2 மேஜை கரண்டி
- உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை
- வாணலியில் காலிஃபிளவர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீரை சேர்த்து 2-3 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- வடிகட்டியைப் பயன்படுத்தி தண்ணீரை வடிகட்டவும். திசு பேப்பர் அல்லது சுத்தமான துணியை கொண்டு அதிகப்படியான தண்ணீரை ஒத்தி எடுக்கவும்.
- இதற்கிடையில் சாஸ் செய்வதற்க்கு தேவையான காய்கறிகளை நறுக்கிக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய்யை காயவிடவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது , நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் உப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.
மற்றும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.வதக்கவஇப்போது அதில் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். - தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஒரு கிண்ணத்தில் சோள மாவு மற்றும் தண்ணீரை சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
- அதனை வாணலியில் இருக்கும் கலவையோடு சேர்க்கவும்.
- வாணலியில் என்னை ஊற்றி காலிஃபிளவரை பொரித்து கொள்ளவும்.
- பொறித்த காலிஃபிளவரில் உள்ள அதிகப்படியான எண்ணையை திசு பேப்பரில் ஒற்றி எடுக்கவும்.
- பொறித்த காலிஃபிளவரை தயாரித்து வைத்துள்ள சாஸில் கலந்து சூடாக பரிமாறவும்.
No comments:
Post a Comment