Tuesday 20 June 2017

செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந்து பால் எடுக்குக்கும்போது கிடைக்கும் சக்கையை உலர செய்து சோயாவை தயார் செய்கிறார்கள் . எனவே பல அசுத்தங்கள் அதில் இருக்கும். எனவே வேகவைத்தவுடன்  ஒரு முறைக்கு 2-3 முறைக்கு அதனை அலச வேண்டும். மேலும் சோயாவில் உள்ள தண்ணீரை நன்கு பிழிந்தால்தான் மசாலாவின் சுவை அதனுள் நன்கு இறங்கும்.

இந்த குழம்பு என் சொந்த செய்முறையை . நான் தோராயமாக பொருட்களை தேர்வு செய்து மதிய உணவிற்கு இதை முயற்சி செய்தேன் . இது அற்புதமாய் இருந்தது. செட்டிநாடுட் டிஷ் போன்ற ருசி இதில் இருந்தது . சாதத்துடன் இது நன்றாக இருந்தது . இது சப்பாத்தி மற்றும் பிரியாணி அல்லது பூலாவோவுடன் நன்கு இருக்கும். இது இறைச்சிக்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும். சாதத்தில் நெய்யோடு இதை உண்டால் மட்டன் போன்று சுவைக்கும் . எல்லாவற்றிலும், இந்த செய்முறையில் குறைந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்டுள்ளது . இது டயட்டில் உள்ளவர்களுக்கு சுவையான விருந்து.


TO READ THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.




TO READ THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.

தேவையான பொருட்கள்

அரைக்க 

  1. சோயா/ மீல் மேக்கர் - 1/2 கப் 
  2. சின்ன  வெங்காயம் - (8-10)
  3. தக்காளி - 2
  4. சீரகம்- 1 தேக்கரண்டி
  5. சோம்பு/ பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
  6. மிளகு - 1/2 தேக்கரண்டி
  7. மிளகாய் வற்றல் - 4
  8. கொத்தமல்லி விதை - 3 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை - (2-3)
  10. தேங்காய் சில் - 1 1/2 தேக்கரண்டி
  11. உப்பு - சுவைக்கைக்கேற்ப 

தாளிக்க 

  1. கடுகு - 1/2 தேக்கரண்டி
  2. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  3. நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை 

  1. வாணலியில் சோயா/ மீல் மேக்கர் மற்றும் தண்ணீரை சேர்க்கவும். சிறிது உப்பை சேர்க்கவும். 5 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். மீல் மேக்கரின் அளவு கூடி இருக்கும். அதனை ஆற விடவும். தண்ணீரை வடிகட்டி நன்கு அலசவும் , சோயாவில் உள்ள அதிகமான நீரை நன்கு பிழிந்து எடுக்கவும்.
  2. வாணலியில்  சீரகம், பெருஞ்சீரகம், மிளகு, கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகாய் வற்றலை வறுக்கவும்.
  3. அதனுடன் முழு சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். 
  4. நறுக்கிய  தக்காளி  மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். இந்த கலவையை ஆற விடவும்.
  5. மிக்ஸியில், வெங்காய- தக்காளி கலவையுடன் தேங்காய் சில்லை சேர்க்கவும்.
  6. அதனை மைய அரைக்கவும்.
  7. வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
  8. கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்க்கவும். 
  9.  உளுத்தம் பருப்பு பொன் நிறமாக மாறிய பின் , அரைத்த கலவைவுடன் சிறிது தண்ணீரை இதில் சேர்க்கவும்.
  10.  தேவைக்கு ஏற்ப உப்பை சேர்க்கவும்.
  11. பிழிந்த மீல் மேக்கரை அதனோடு சேர்த்து 3-5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  12.  நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும். 
  13. சப்பாத்திவுடன் அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும். 

TO READ THIS RECIPE IN ENGLISH, CLICK HERE.

குறிப்பு 

  1. விருப்பப்பட்டால், சோயாவில் உள்ள நீரை நன்கு பிழிந்து எடுத்தவுடன்  2 அல்லது 4 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளலாம்.
  2. சிறிய அளவு மீல் மேக்கர் கூட கடைகளில் கிடைக்கிறது. அதை கூட உபயோகிக்கலாம்.
  3. தேங்கையை வெங்காயத்தோடு சேர்த்து வதக்கிக்கொள்ளலாம். சுவை சிறிது மாறுபடும்.
  4. ஒரு மாறுபாட்டிற்காக, ஏலக்காய, இலவங்கப்பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை மற்றும் அண்ணாச்சி பூ/ மூக்கு ஆகியவற்றை சோம்போடு சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.
  5. சோயாவில் உள்ள தண்ணிரை நன்கு பிழிந்து எடுப்பதால் மசாலாவை அது நன்கு கிரகித்துகொள்ளும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் மற்றும் சுவைஓட்டிகளை சேர்க்கவும். 

No comments:

Post a Comment

வாசகர்களின் விருப்பமான ரெசிபி

செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...