Saturday 29 July 2017

சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் தக்காளி குழம்பு ரெசிபி

தக்காளி குழம்பு  ஒரு பிரபலமான சௌராஷ்ட்ரா உணவு ஆகும். இட்லி மற்றும் தோசையுடன் இந்த குழம்பு  நன்றாக இருக்கும். சௌராஷ்ட்ரா மக்களின் திருமண விழாவில் அல்லது ஏதாவது விசேஷங்களில் இந்த குழம்பு  நிச்சயம் தயார் செய்யப்படும். எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும். இது தயாரிப்பது மிகவும் சுலபம்.


To Read this Recipe in English, Click Here 

தேவையான பொருட்கள்

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 3
  3. பச்சை மிளகாய் - 2
  4. குழம்பு பொடி /  - 2 1/2 மேஜை கரண்டி 
  5. றிவேப்பிலை  - 1 
  6. கொத்தமல்லி இலை - 2 
  7. கடுகு - 1/2 தேக்கரண்டி
  8. சீரகம்  - 1/2 தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு  - 1 தேக்கரண்டி 
  10. உப்பு - சுவைக்கு ஏற்ப 
  11. நல்லெண்ணெய்  - 3 மேஜை கரண்டி 
  1. குக்கரில் எண்ணெய்யை காயவிடவும்.
  2. கடுகை சேர்க்கவும்.
  3. உளுத்தம் பருப்பை சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
  4. சீரகத்தை சேர்க்கவும்.
  5. நீளமாக வெட்டியா வெங்காயத்தை சேர்க்கவும்.
  6. நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
  7. கறிவேப்பிலையை சேர்க்கவும். வெங்காயம் பொன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
  8. நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
  9. தேவையான அளவு உப்பை சேர்த்து தக்காளியை எண்ணெய் வெளிவரும் வரை வதக்கவும்.
  10. ஒரு பாத்திரத்தில் குழம்பு பொடியை எடுத்துக்கொள்ளவும்.
  11. 1/2 கப் தண்ணீரை ஊற்றவும். 
  12. கட்டி இல்லாதவாறு நன்கு கலக்கவும்.
  13. கரைத்து வாய்த்த குழம்பு பொடியை வெங்காய- தக்காளி கலவையோடு சேர்க்கவும்.
  14. தேவையான அளவு தண்ணீரை உற்றி கொதிக்க விடவும்.
  15. குக்கரை மூடவும். 1 விசில் வந்தவுடன் சிறு தீயில் 1 விசில் வரவிடவும். பிரஷரயை தானாகவே வெளியேற விடவும்.
  16. நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும். 
  17. தோசை அல்லது இட்லி உடன் சூடாக பரிமாறவும்.

To Read this Recipe in English, Click Here 

குறிப்பு

  1. உப்பு மற்றும் காரத்தை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்.   
  2. நல்லெண்ணெய் இதற்க்கு கூடுதல் சுவை கொடுக்கும்.
  3. கரம் குறைவாக வேண்டும் என்றல் பச்சை மிளகாயை தவிர்க்கலாம்.
  4. இங்கே உபயோகப்பட்டுள்ள குழம்பு பொடி சௌராஷ்ட்ரா மக்களின் பணியில் செய்த குழம்பு பொடி. வேற குழம்பு பொடி சேர்த்தால் சுவை மாறுபடும். 
    

புதினா - தேங்காய் சட்னி ரெசிபி


புதினா சட்னி மிகவும் எளிமையான சட்னி இதை குறுகிய நேரத்திலே தயார் 
செய்துவிடலாம். புதினாவில் அதிக சத்துகளும் நன்மைகளும் இருக்கிறது. இந்த சட்னியில் புதினா அதிகமாக சேர்க்கப்படுகின்றது எனவே இந்த சட்னி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.   

To Read this Recipe in English, Click Here 

தேவையான பொருட்கள்

  1. புதினா இலைகள் - 3/4 கப்
  2. தக்காளி - 4
  3. கடலை பருப்பு  - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
  4. மிளகாய் வற்றல் - 4
  5. கறிவேப்பிலை - 3 
  6. கொத்தமல்லி இலை - 6 
  7. தேங்காய் - (2-3) சில் 
  8. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  9. உப்பு - சுவைக்கு ஏற்ப 
  10. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க 

  1. கடுகு - 1/2 தேக்கரண்டி
  2. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  3. மிளகாய் வற்றல் - (2-3)
  4. கறிவேப்பிலை - 2  

To Read this Recipe in English, Click Here 

செய்முறை 

  1. வாணலியில் எண்ணெய்யை காயவிடவும்.
  2. கடலை பருப்பை சேர்க்கவும். போன் நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
  3. மிளகாய் வற்றலை கிள்ளி போடவும்.
  4. நறுக்கிய தக்காளியை சேர்க்கவும்.
  5. புதினா இலைகளை சேர்க்கவும்.
  6. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.
  7. தேங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
  8. உப்பு மற்றும் பெருங்காயத்தை சேர்க்கவும்.
  9. தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை உற்றி தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும்.
  10. சட்னி கலவையை ஆறவிடவும்.

  11. மிக்ஸியில், கலவையை சட்னி பதத்திற்கு அரைக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வாணலியில் ஒரு கொதி வரவிடவும்.
தாளிப்பதற்கு 
  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
  2. தாளித்ததை சட்னியில் சேர்க்கவும்.
  3. இட்லி, தோசை அல்லது தக்காளி சாதத்துடன் பரிமாறவும்.

To Read this Recipe in English, Click Here 

குறிப்பு

  1. தேங்காய் இல்லாமல் கூட இந்த சட்னியை செய்யலாம். 
  2. விருப்பப்பட்டால், தக்காளியோடு கொஞ்சம் புளியை சேர்த்து கொள்ளலாம். 
  3. உப்பு மற்றும் காரத்தை விருப்பத்திற்கு ஏற்றவாரு மாற்றிக்கொள்ளலாம்.    
       

Friday 28 July 2017

பேபி கார்ன் மிளகு வருவல் ரெசிபி


To Read this Recipe in English, Click Here 

தேவையான பொருட்கள்

பேபி கார்ன் 65க்கு 


  1. பேபி கார்ன்  - 8 துண்டுகள்
  2. சோள மாவு - (3-4) டேபிள் ஸ்பூன் 
  3. மைதா - 1 டேபிள் ஸ்பூன் 
  4. அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
  5. சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் 
  6. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  7. உப்பு - 1/4 தேக்கரண்டி
  8. எலுமிச்சை - 1/2

மிளகு வருவலுக்கு 

  1. வெங்காயம் (பெரியது) - 1
  2. கறிவேப்பிலை - 2 
  3. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
  4. உப்பு - சிறிது (தேவைப்பட்டால்) 
  1. பேபி கார்னை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அகலமான கிண்ணத்தில், சோள மாவு, மைதா, அரிசி மாவு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி அடர்த்தியான கலவையாக கலக்கி கொள்ளவும்.
  3. நறுக்கிய பேபி கார்னை மாவு கலவையில் சேர்த்து கலக்கவும். 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
  5. பேபி கார்ன் துண்டுகளை நன்கு பொரிக்கவும்.
  6. பொரித்த பேபி கார்ன் துண்டுகளை கவனமாக எண்ணெயிலிருந்து எடுக்கவும்.
  7. அதிக எண்ணெய்யை திசு பேப்பரில் எடுக்கவும்.
  8. அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், மிளகு தூள், கறிவேப்பிலையை சேர்க்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் உப்பு சேர்க்கவும். 2 நிமிடங்கள் வரை வதக்கவும்.
  9. பொரித்த பேபி கார்ன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
  10. சிற்றுண்டியாகவோ அல்லது சாதத்துடனோ சூடாக பரிமாறவும்.    

  1. விருப்பப்பட்டால், வெங்காய தாள் அல்லது குடை மிளகாய் வெங்காயத்தோடு சேர்த்து வதக்கிக்கொள்ளலாம்.
  2. சைனீஸ் சுவைக்கு சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
  3. பேபி கார்ன் பொரிக்க தயாரித்த கலவையில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்தால் சுவை கூடும்.
  4. எலுமிச்சைக்கு பதிலாக தயிரை சேர்த்து கொள்ளலாம்.
  5. உப்பு மற்றும் காரத்தை சுவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும்.     

    Monday 24 July 2017

    கார குழி பணியாரம் ரெசிபி - இட்லி/ தோசை மாவிலிருந்து

    குழி பணியாரம் ஒரு செட்டிநாடு சிற்றுண்டி ஆகும். சில நிமிடங்களில் வீட்டிலேயே மிகவும் எளிதாகச் செய்யக்கூடிய தின்பண்டம் ஆகும். இது இட்லி/ தோசை மாவிலிருந்து எளிதாக செய்யமுடியும்.


    இது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியோடு சுவையாக இருக்கும்.  




    தேவையான பொருட்கள்

    1. இட்லி / தோசை மாவு - 4 கப்

    தாளிக்க 

    1. கடுகு - 1 தேக்கரண்டி
    2. உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
    3. கடலை பருப்பு  - 1/2 டீஸ்பூன்
    4. சீரகம் - 2 தேக்கரண்டி
    5. பச்சை மிளகாய் - 3
    6. வெங்காயம் - 3
    7. கறிவேப்பிலை - 2 
    8. கொத்தமல்லி இலை - 3 

    செய்முறை 

      1.  வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும்  கொத்தமல்லி இலையை நன்றாக நறுக்கி கொள்ளவும்.
      2. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் கடலை பருப்பு மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்.
      3. கடலை பருப்பு பொன் நிறமாக மாறும் பொழுது நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். 
      4. வெங்காயம் வதங்கியயுடன் அடுப்பை அணைத்து, நறுக்கிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
      5. இட்லி மாவோடு சேர்த்து நன்கு கலக்கவும்.

      6.  பணியார கடாயில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
      7. ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும்.
      8. கடாயை மூடி சிறு தீயில் பணியாரத்தை வேக வைக்கவும்.
      9.   (1-2) நிமிடங்கள் கழித்து பணியாரத்தை திருப்பி போடவும்.
      10.  மறுபுறமும் வேக விடவும்.
      11. சுவையான பணியாரம் தயார்.  
      1. இட்லி மாவில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கவில்லை தேவைப்பட்டால் சிறிது உப்பை சேர்த்து கொள்ளலாம்.
      2. விருப்பப்பட்டால் துருவிய கேரட்டை சேர்க்கலாம்.  

      வாசகர்களின் விருப்பமான ரெசிபி

      செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

      சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...