Tuesday 11 July 2017

வேர்க்கடலை சட்னி ரெசிபி


    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி என்பது ஒரு ஆந்திர உணவு வகை ஆகும். இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும் . இது தெலுங்கு பேசும் மக்களின் பாரம்பரிய உணவாகும். இது இட்லி, தோசை மற்றும் ஊத்தாப்பம் உடன் சிறந்த சைடு டிஷ் ஆக இருக்கும்.

    வேர்க்கடலை சட்னி பல விதங்களில் தயாரிக்கலாம். இந்த செய்முறையில் எந்த பருப்பும் பயன்படுத்தப்படவில்லை. மறுபாட்டிற்கு 'குறிப்பு' பகுதியை படிக்கவும். ஒரு முறை தயாரிக்கப்பட்டால் 2 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது சிறந்தது. 2 மணி நேரம் கழித்து சுவை குறையக்கூடும்.

    தேவையான பொருட்கள்
    1. பச்சை கடலை/வேர்க்கடலை - 1/2 கப்
    2. சின்ன வெங்காயம் - 2
    3. பூண்டு - 2
    4. மிளகாய் வற்றல் - 2
    5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
    6. புளி - 1 தேக்கரண்டி
    7. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
    8. உப்பு - 2 தேக்கரண்டி அல்லது  சுவைக்கு ஏற்ப 
    9. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தாளிக்க 

    1. கடுகு - 1/2 தேக்கரண்டி
    2. உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
    3. மிளகாய் வற்றல் - 4
    4. கறிவேப்பிலை - 2  

    செய்முறை 

    1. வேர்க்கடலையை வாணலியில் வறுக்கவும்.
    2. வறுத்த வேர்க்கடலையை ஆறவிடவும்.
    3. வேர்க்கடலையின் தோலை நீக்கி தனியே வைத்து கொள்ளவும்.
    4. வாணலியில் சிறிது எண்ணெய்யை காயவிடவும். அதில்,  சீரகம், வெங்காயம், பூண்டு, புளி, உப்பு, பெருங்காயம் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சேர்க்கவும். 2 நிமிடங்கள் வதக்கிய பின் ஆற விடவும்.  
    5. மிக்ஸியில் வேர்கடலையோடு வதக்கிய வெங்காய கலவையை சேர்க்கவும்.
    6. சிறிது தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
    தாளிப்பதற்கு 
    1. வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும்.
    2. தாளித்ததை சட்னியோடு சேர்த்து பரிமாறவும்.

    குறிப்பு

    1. வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தாதவர்கள், உளுத்தம் பருப்பு அல்லது கடலை பருப்புபை  சிவப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையோடு சேர்த்து வதக்கி வறுத்த வேர்கடலையோடு சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.
    2. புளி சேர்க்க விருப்பம் இல்லையென்றால் அதனை தவிர்க்கலாம் அல்லது புளிக்கு பதிலாக தக்காளியை உபயோகிக்கலாம்.
    3. விருப்பப்பட்டால், வேர்க்கடலையின் தோலை நீக்காமல் கூட உபயோகிக்கலாம். அது கொஞ்சம் கசப்பாக இருக்கக்கூடும்.
    4. மாறுதலுக்கு தேங்காயை பச்சையகவோ அல்லது வெங்காயத்துடன் வதக்கியோ வேர்கடலையுடன் அரைத்துக்கொள்ளலாம்.   


    No comments:

    Post a Comment

    வாசகர்களின் விருப்பமான ரெசிபி

    செட்டிநாடு மீல் மேக்கர் கிரேவி

    சோயா/ மீல் மேக்கரில்  புரத சத்து அதிகமாக உள்ளது. சைவம் சாப்பிடுபவர்களுக்கு  சோயாவிலிருந்து போதுமான புரதம் கிடைக்கும். சோயா பீன்ஸிலிருந...