குழி பணியாரம் ஒரு செட்டிநாடு சிற்றுண்டி ஆகும். சில நிமிடங்களில் வீட்டிலேயே மிகவும் எளிதாகச் செய்யக்கூடிய தின்பண்டம் ஆகும். இது இட்லி/ தோசை மாவிலிருந்து எளிதாக செய்யமுடியும்.
இது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியோடு சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
இது தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியோடு சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- இட்லி / தோசை மாவு - 4 கப்
தாளிக்க
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 3
- வெங்காயம் - 3
- கறிவேப்பிலை - 2
- கொத்தமல்லி இலை - 3
- வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை நன்றாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் கடலை பருப்பு மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- கடலை பருப்பு பொன் நிறமாக மாறும் பொழுது நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் வதங்கியயுடன் அடுப்பை அணைத்து, நறுக்கிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து, நன்றாக கலக்கவும்.
- இட்லி மாவோடு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பணியார கடாயில் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றி காயவிடவும்.
- ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும்.
- கடாயை மூடி சிறு தீயில் பணியாரத்தை வேக வைக்கவும்.
- (1-2) நிமிடங்கள் கழித்து பணியாரத்தை திருப்பி போடவும்.
- மறுபுறமும் வேக விடவும்.
- சுவையான பணியாரம் தயார்.
- இட்லி மாவில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்கவில்லை தேவைப்பட்டால் சிறிது உப்பை சேர்த்து கொள்ளலாம்.
- விருப்பப்பட்டால் துருவிய கேரட்டை சேர்க்கலாம்.
No comments:
Post a Comment